கொரோனா சோதனை: மேலும் 11 ஆய்வகங்களுக்கு ஐசிஎம்ஆர் அனுமதி

0 1224

கொரோனா சோதனை நடத்துவதற்காக, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 11 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்த 11 ஆய்வகங்களையும் சேர்த்து நாடு முழுதும் கொரோனா சோதனைக்கு என்றே 1016 ஆய்வகங்கள் உள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 15 ஆயிரத்து 446 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை 77 லட்சத்து 76 ஆயிரத்து 228 என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments