ஜம்மு காஷ்மீரில் 14 வயது சிறுவர்களை கடத்தும் தீவிரவாதிகள்

0 1808

ஜம்மு காஷ்மீரில் 14 வயதே ஆன சிறுவர்களை கடத்தும் தீவிரவாத கும்பல்கள், அவர்களுக்கு பயிற்சி அளித்து அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுத்துவதாக அமெரிக்க அரசின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளில் ஆட்கடத்தல் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், நாடாளுமன்றத்தில் தாக்கல் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் 12 வயதான சிறார்களை, மாவோயிஸ்ட் கும்பல்கள் கடத்திச் சென்று வன்முறை பயிற்சிகளில் ஈடுபடுத்துவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்படுவதுடன், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கையாளும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என அறிக்கை கூறுகிறது.

ஆட்கடத்தல் சம்பவங்களை குறைக்க இந்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமெரிக்க அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments