தமிழ்நாட்டில் இன்று 3645 பேருக்கு கொரோனா உறுதி

0 8618
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3645 பேருக்கு கொரோனா உறுதியானது....

தமிழ்நாட்டில், 2ஆவது நாளாக, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உக்கிரம் எட்டிய கொரோனா பாதிப்பு, 75 ஆயிரத்தை நெருங்குகிறது.

தமிழகத்தில் தினமும் 2 ஆயிரம் பேர் வீதம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது,3 ஆயிரம் என்ற விகிதத்தை எட்டி உள்ளது. 2ஆவது நாளாக, கொரோனா பாதிப்பு, 3 ஆயிரத்தை தாண்டியது.

இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில், 3 ஆயிரத்து 645 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் 122 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் திரும்பியவர்கள் அடங்குவர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

ஒரே நாளில் 46 பேர் பலி ஆனதால், கொரோனா உயிர்ப்பலி 957 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகரைச்சேர்ந்த 34 வயது பெண் , திருவள்ளூரைச்சேர்ந்த 40 வயது பெண் உள்பட மொத்தம் 31 பேர், அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனைகளில் 3 பெண்கள் உள்பட 15 பேர் மரணம் அடைந்தனர்.

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டதால் குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியது.

ஒரே நாளில் சுமார் 34 ஆயிரம் பேருக்கு கொரோ னா பரிசோதனை நடத் தப்பட்டதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, மொத் தம் 10 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு இதுவரை, பரிசோதனை நடத்தி முடித்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைத் தவிர, எஞ்சிய அனைத்து மாவட்டங் களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments