சானிடைசரால் இருசக்கர வாகனத்தில் தீ

0 1681
சாலையோரம் நின்ற இருசக்கர வாகனத்தின் முன்பகுதி திடீரென தீப்பற்றியது

ஆந்திர மாநிலம் ராஜ முந்திரி அருகே பெட்ரோல் டேங்க் அருகே வைக்கப்பட்டிருந்த சானிடைசர் தீப்பற்றியதாக கூறப்படும் நிலையில், இருசக்கர வாகனத்தில் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

தேவிசவுக் வீதியில் சாலையோரம் கடை ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் முன்பகுதி திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தகவலறிந்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் வருவதற்குள், அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்களே தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருசக்கர வாகனத்தின் முன்பக்கம் பெட்ரோல் டேங் அருகே வைக்கப்பட்டிருந்த சானிடைசர் வெயிலின் தாக்கத்தால் தீப்பற்றியதாக அங்கிருந்தவர்கள் கூறினர். ஆனால் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments