தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

0 2494
கொரோனாவில் இருந்து கணிசமானோர் குணமடைந்து வீடு திரும்பியும் வருகின்றனர்

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே சமயம் கணிசமானோர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியும் வருகின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 240 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 646ஆக உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருந்தபின் மீண்டும் ஊர் திரும்புபவர்களாலேயே பாதிப்பு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 355 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 70 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 254ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 254 பேரில் ஆயிரத்து 874 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 51 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள ஆயிரத்து 329 பேர் சென்னை, திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, பெங்களூரு, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்களும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் இதில் அடங்குவர். பாதிப்பில் இருந்து குணமடைந்து 564 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பிறந்த 2 குழந்தைகள் உட்பட 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 454ஆக உயர்ந்துள்ளது. 143 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று புதிதாக மேலும் 30 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது. இதில் இதுவரை 9 பேர் உயிர் இழந்துள்ள நிலையில் 203 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மதுரையில் 15 போலீசார், 6 மருத்துவர்கள் உட்பட ஒரே நாளில் 175 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 279ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 557 பேர் குணமடந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 711 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உட்பட மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 31 பேரையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 787ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 519 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். 264 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. இந்த 85 பேரில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தொழிற்சாலைகளுக்குச் சென்று திரும்பியவர்கள், சென்னை சென்று திரும்பியவர்கள் 65 பேரும் ஏற்கனவே கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என 20 பேரும் அடங்குவர். மொத்தமுள்ள ஆயிரத்து 573 பேரில் 679 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உள்ள நிலையில், 877 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments