தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது - வானிலை ஆய்வு மையம்

0 2629
தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காராணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த இரண்டு  நாட்களுக்கு விழுப்புரம், கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரை  வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கர்நாடக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 லிருந்து 50 கிலோ மீட்டர் வரை சூறை காற்று வீசக்கூடும் என்பதால் ஜூன் 26 27 ஆகிய தேதிகளில் மீனவர்கள் அங்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments