தேர்வெழுதிய மாணாக்கர்களுக்கு முகக்கவசம் தயாரித்தளித்த மாற்றுத் திறனாளி மாணவி

0 1092

கர்நாடக மாநிலத்தில் ஒருகை மட்டுமே முழுவதுமாக உள்ள நிலையிலும் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர், சக மாணாக்கர்களுக்கு முகக்கவசங்களை தையல் இயந்திரம் மூலம் தயாரித்து அளித்து சேவை செய்துள்ளார்.

உடுப்பி மவுன்ட் ரோசரி பள்ளியில் 6ஆம் வகுப்பு பயிலும் அந்த மாணவியின் பெயர் சிந்தூரி ஆகும். 10 வயது ஆகும் மாணவி சிந்தூரிக்கு பிறவியிலேயே இடதுகை முழங்கை வரை மட்டுமே வளர்ந்த நிலையில், அதில் சின்னஞ்சிறிய விரல்கள் வளர்ச்சியின்றி தடைபட்டன.

இந்நிலையில் மாணவி சிந்தூரி அங்கம் வகிக்கும் பள்ளியின் ஸ்கெளட் பிரிவு சார்பில், மாணாக்கர்களுக்கு 1 லட்சம் முகக்கவசம் தயாரிக்க திட்டமிடப்பட்டு, அதில் மாணவி தரப்பிலும் சில முகக்கவசம் தயாரிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வீட்டிலுள்ள தையல் இயந்திரத்தின் மூலம் தாயார் உதவியுடன் 15 முகக்கவசங்களை தைத்து அளித்து மாணவி சிந்தூரி சேவை செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments