சென்னையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 24 பேர் உயிரிழப்பு

0 1489

சென்னையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 81 வயது மருத்துவர் உள்பட 24 பேர் பலியாகியுள்ளனர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரம்பூர், பெரவள்ளூர், வியாசர்பாடி, மந்தைவெளி பாக்கத்தை சேர்ந்த தலா ஒருவரும், வில்லிவாக்கத்தை சேர்ந்த 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் நெசபாக்கத்தை சேர்ந்த 81 வயதான மருத்துவர் உள்ளிட்ட 2 பேரும், ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த 77 வயது மூதாட்டி உள்ளிட்ட 7 பேரும்,  அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 85 வயது முதியவர்,  2 மூதாட்டிகள் உள்பட  4 பேரும் இறந்துள்ளனர்.

இதேபோல் சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டியும்  பலியாகியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments