தமிழகம் முழுவதும் 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு

0 1348

தமிழகம் முழுவதும் 3ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மதுபான கடைகளில் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கண்காணிக்கவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகள், தனிமையான இடங்களில் உள்ள கடைகள் குறித்த விவரங்களை தெரிவிக்க மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 755 கடைகளிலும், திருச்சி மண்டலத்தில் 695 கடைகளிலும், சேலம் மண்டலத்தில் 565 கடைகளிலும், சென்னையில் 535 கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. ஒரு கடைக்கு 2 கேமராக்கள் வீதம் 3ஆயிரம் கடைகளுக்கு 6000 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments