எல்லைகளில் நெடுஞ்சாலைத் திட்டத்தில் பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு

0 872

எல்லைப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் நூறு விழுக்காடு முதல் 170 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லையையொட்டிய இந்தியப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஜூன் ஒன்று முதல் இடர்ப்பாட்டுப் படியை நூறு விழுக்காடு முதல் 170 விழுக்காடு வரை உயர்த்தித் தேசிய நெடுஞ்சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி தொழில்நுட்பப் பணியாளர் அல்லாத டேட்டா என்ட்ரி ஆபரேட்டருக்கு ஊதியம் 16 ஆயிரத்து 770 ரூபாயில் இருந்து 41 ஆயிரத்து 440ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேலைக்கு நாட்டின் மற்ற பகுதிகளில் பணியாற்றுவோருக்கு 28 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இதேபோல் எல்லைப் பகுதியில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஒப்பந்த முறையில் பணியாற்றுவோர் 5 லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடும், 10 லட்ச ரூபாய் விபத்துக் காப்பீடும் பெறுவார்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments