ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 1454

ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

புல்வாமா மாவட்டம் அவந்திபோராவிலுள்ள திரால் பகுதியில் சேவா உலர் எனுமிடத்தில் (Chewa Ular) பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியை அவர்கள் சுற்றிவளைத்தபோது இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இந்த சண்டையில் இதுவரை 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், சண்டை தொடர்வதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.இதனிடையே, அனந்த்நாக்கில் நெடுஞ்சாலை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 1 வீரர் வீரமரணமடைந்தார். சிறுவன் ஒருவனும் பலியாகியுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments