தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது திங்கட்கிழமைக்கு பிறகு தெரியும் - முதலமைச்சர்

0 19635

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் திங்கட்கிழமை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், தமிழக அரசின் நடவடிக்கைகளால், கொரோனா தொற்றால் இறப்போரின் விகிதம் குறைவாக உள்ளது என்றார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை 37000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

திருச்சியில் தொழில் தொடங்க 5 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். திருச்சி மணப்பாறையில் சுமார் 150 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நவீன உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

வரும் திங்கட்கிழமை, மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், நிபுணர் குழுவின் பரிந்துரை மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments