CBSE தேர்வு முடிவுகள் ஜூலை 15 ல் வெளியாகும் என தகவல்

0 1422

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட எஞ்சிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகள் மற்றும் உள்மதிப்பீட்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

இந்த தேர்வு முடிவுகளில் அறிவிக்கப்படும் மதிப்பெண் குறித்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏதேனும் அதிருப்தி ஏற்பட்டால், கொரோனா சூழல் மேம்பட்ட பின், குறிப்பிட்ட பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

அப்படி தேர்வு நடக்கும் பட்சத்தில் அதில் பெறும் மதிப்பெண்களே இறுதியானவையாக கருதப்படும் என சிபிஎஸ்இ  தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யாம் பரத்வாஜ் அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments