அசாம் எல்லையிலுள்ள பாசன கால்வாயில் நீர் திறந்து விடுவதை நிறுத்தியது பூடான்

0 1616

அசாம் எல்லையில்  விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பாசனக் கால்வாயில் நீர் திறந்து விடுவதை பூடான்  நிறுத்தியுள்ளது.

பூடானில் இருந்து செயற்கையாக கட்டப்பட்ட அக்கால்வாய் மூலம் கிடைக்கும் நீரை கொண்டு, பாஸ்கா மாவட்டத்தில்  கடந்த 1953ம் ஆண்டு முதல் சுமார் 25 கிராமங்களைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர்  விவசாயம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் அந்த பாசன கால்வாயில் நீர் திறந்து விடுவதை பூடான்  நிறுத்திக் கொண்டுள்ளது. அண்மையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பூட்டான் வருவதற்கு அந்நாட்டு அரசு  தடை விதித்தபோது அந்த பாசன கால்வாயை பயன்படுத்தும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதை பூடான் நிறுத்தியுள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments