உ.பி.யில் தற்சார்பு வேலைவாய்ப்புத் திட்டம் - தொடங்கி வைத்த பிரதமர்

0 1646

உத்தரப்பிரதேசத்தில் ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தற்சார்பு வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

உத்தரப்பிரதேசத்தின் 31 மாவட்டங்களில் ஊரகப் பகுதி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தைப் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலியில் தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் இருந்து காணொலியில் பங்கேற்றார்.

இந்தத் திட்டத்தின்படி மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களில் 25 வகையான வேலைப் பிரிவுகளில் ஒருகோடியே 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும்.

ஒருநாளைக்கு 60 லட்சம் பேருக்கு என்கிற கணக்கில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மொத்தம் 10 கோடியே 6 லட்சம் மனித உழைப்பு நாட்கள் வேலைவாய்ப்பு அளிப்பதும் இதில் அடங்கும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments