இந்தியப் பொருளாதாரம் நடப்பாண்டில் 4.5 சதவீத வீழ்ச்சியடையும்

0 665

இந்தியப் பொருளாதாரம் நடப்பாண்டில் நாலரை விழுக்காடு வீழ்ச்சியடையும் என்றும், இரண்டு ஆண்டுகளில் ஒரு விழுக்காட்டுக்கும் சற்று அதிகமாக மட்டுமே வளரும் எனப் பன்னாட்டுப் பண நிதியம் தெரிவித்துள்ளது.

புதனன்று வெளியிட்டுள்ள கணிப்பில், கொரோனா பரவல், ஊரடங்கு கடைப்பிடிப்பு ஆகியவற்றால் நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நாலரை விழுக்காடு வீழ்ச்சியடையும் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியலாளரான கீதா கோபிநாத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் இந்தியப் பொருளாதாரம் இரண்டு ஆண்டுகளில் அடையப்போகும் வளச்சி வலிமையான வளர்ச்சி இல்லை என்றபோதிலும், உலகின் மற்ற நாடுகளை ஒத்த வளர்ச்சியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments