கொரோனா புதிய உச்சம் எகிறும் பாதிப்பு

0 3684

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 17 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், அத்தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதேபோல் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 15 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அத்தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 17 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் கொரோனா தொற்றுக்கு மேலும் 407 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 401ஆகவும், அத்தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 301ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 1 லட்சத்து 89 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 2 லட்சத்து 85 ஆயிரத்து 637 பேர் இதுவரை குணமாகி உள்ளனர்.

நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 3 மாநிலங்களாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் ஆகியவை திகழ்கின்றன. இதில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 741ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 931ஆகவும் உயர்ந்துள்ளது.

2ம் இடத்திலுள்ள டெல்லியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை கடந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,429ஆக அதிகரித்துள்ளது.

3ம் இடத்திலுள்ள தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 977ஆகவும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 911ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பும், கொரோனாவுக்கு நேரிட்ட உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments