பள்ளி பருவத்திலேயே பிரபலம் ; டிக்டாக்கில் 11 லட்சம் ஃபாலோயர்ஸ்... ஷியா கக்கார் தற்கொலை

0 22069

டிக்டாக் பிரபலம் ஷியா கக்கார் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன் நடன அசைவுகளால் சமூகவலைத் தளத்தில் பிரபலமானவர் ஷியா கக்கார் (வயது 16). டெல்லியைச் சேர்ந்த இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஸ்னேப்சாட், யுடியூப் என அனைத்து சமூகவலைத் தளங்களிலும் பிரபலமாக வலம் வந்தார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 1 லட்சம் பேர் இவரைப் பின் தொடர்கின்றனர். டிக்டாக்கில் 11 லட்சம் ஃபாலோயர்ஸ் உண்டு. புது டெல்லியில் ப்ரீத்தி விகாரில் உள்ள அவரின் வீட்டில் ஷியா தற்கொலை செய்து கொண்டார்.

ஷியா கக்காரின் விளம்பர ஒப்பந்தங்களை கவனித்துக் கொள்ளும் அவரின் மேலாளர் அர்ஜூன் ஷெரீன் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் , ''தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாளுக்கு முன்பு கூட விளம்பரப் பட ஷூட்டிங்கில் பங்கேற்றார். எந்த வித்தியாசத்தையும் நான் உணரவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்காக காரணம் குறித்த எந்த கடிதத்தையும் ஷியா கக்கார் எழுதி வைக்கவில்லை. ஷியாவின் குடும்பத்தினர் உதவியுடன் அவரின் போனை அன்லாக் செய்ய போலீஸார் முயன்று வருகின்றனர். கடந்த 4, 5 தினங்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்தாகச் சொல்கிறார்கள். ஷியா படித்த பள்ளி ஆசிரியைகள், நண்பர்கள், தோழிகளிடமும் விசாரணை நடத்த போலீஸ் முடிவு செய்துள்ளது. ஷியாவின் தற்கொலையால் அவரின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனால், குடும்பத்தினர் சார்பில் ஷியாவின் மேலாளர் அர்ஜூன் ஷெரின் விளக்கமளித்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments