பீகாரில் ஒரே நாளில் 83 உயிர்களை பறித்த இடி, மின்னல்; உத்தரபிரதேசத்திலும் 24 பேர் பலி!

0 2064

பீகாரில் இடி மின்னல் காரணமாக, ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் இரு நாள்களில் மொத்தம் 92 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரு நாள்களாக பீகாரில் 23 மாவட்டங்களை இடி மின்னல் தாக்கியது. நேற்று ஒரே நாளில் 83 பேர் இடி , மின்னலுக்குப் பலியாகினர். அதிபட்சமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 13 பேர் இறந்துள்ளனர். வீடுகள் மற்றும் மக்களின் உடைமைகளும் சேதமடைந்துள்ளன. 30 பேர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர். ககாரியா மாவட்டத்தில் 15 கால்நடைகளும் பலியாகின.  மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம், பீகாரின் 38 மாவட்டங்களையும் இன்னும் சில நாள்களுக்கு இடி மின்னல் தாக்க வாய்ப்புள்ளது. கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், மக்கள் வீடுகளுக்குள் பத்திரமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்'' என்று தெரிவித்துள்ளது. கிழக்கு சம்பாரன், மேற்கு சம்பாரன், கோபால்கஞ்ச் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாட்னாவு உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் களத்தில் உள்ளனர்...

பீகார் தவிர உத்தரபிரதேசத்திலும் இடி மின்னலுக்கு 24 பேர் பலியாகியுள்ளனர். கேரக்பூர் - பஸ்தி பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், பெரும்பாலோனோர் வயல் வெளிகளில் வேலை பார்த்து வந்தவர்கள். உத்தரபிரதேசத்தில் 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments