இந்தியாவிலேயே ரிஸ்க்கான பகுதி ; லடாக்கில் சாலை அமைப்பவர்களுக்கு 170 சதவிகித சம்பள உயர்வு!

0 9576

இந்தியாவிலியே அதிக ரிஸ்க் நிறைந்த பகுதியாக லடாக் மாறியிருக்கிறது. அண்டை நாடானா ,சீனா அடிக்கடி  ஆக்கிரமைப்பில் ஈடுபடுவதால் இந்த பகுதியில் பணிபுரிபவர்களின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை என்கிற நிலையும் உள்ளது. இதனால், லடாக்கில் சாலை போடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் 100 சதவிகிதம் முதல் 170 சதகிவிதம் வரை சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பளவுயர்வு ஜூன் 1- ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. சாதாரண டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டருக்கு ரூ. 16,770 சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த சம்பளம் ரூ. 41,440 என அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு அதிகபட்சமாக ரூ.28,000 தான் சம்பளமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 25,700 சம்பளம் பெற்ற அக்கவுண்டன்டுக்கு இனிமேல் ரூ.47,360 சம்பளமாக வழங்கப்படும்.

சிவில் இன்ஜீனியருக்கு ரூ. 30,000 சம்பளம் வழங்கப்பட்டது. இந்த சம்பளம் அப்படியே இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.60,000 ஆக்கப்பட்டுள்ளது. மேலாளருக்கு ரூ.50,000 லிருந்து ரூ. 1,12,000 என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சீனியர் மேலாளர்களுக்கு ரூ. 55,000 என இருந்த சம்பளம் ரூ.1,23,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, ரூ.5 லட்சத்துக்கான ஹெல்த் இன்சூரன்ஸ், ரூ. 10 லட்சத்துக்கான விபத்து காப்பீடு, போக்குவரத்து அலவென்ஸ்கள் தனி. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பகுதிகள் என இந்திய அரசு சில பகுதிகளை வரையறுத்துள்ளது. அதில் முதல் கட்டத்தில் அஸ்ஸாம், மேகலாயா, சிக்கிம், திரிபுரா, உத்ரகாண்ட் உள்ளன. அடுத்த இடத்தில் அருணாசலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், மிஸோரம் , நாகலாந்து ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதிக ரிஸ்க் நிறைந்த பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள லடாக் பகுதி மூன்றாவது பிரிவில் உள்ளது. லடாக்கில் சமீபத்தில் இந்திய ராணுவம் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது. இதனால், கோபமடைந்த சீனா, எல்லையில் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments