சீன மின்பொருட்களின் மீதான சுங்கவரியை உயர்த்த மத்திய அரசு முடிவு

0 4518

சீன மின்பொருட்களின் இறக்குமதியை குறைக்கும் நோக்கில் அவற்றின் மீதான சுங்கவரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய மின்சாரம்-புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர் கே சிங் இதைத் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதியாகும் சோலார் மின்திட்ட கலங்களுக்கான  சுங்கவரி ஆகஸ்டு மாதம் 20 ல் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்ற அவர், ஒரு வருடத்திற்குப் பிறகு அது 40 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.

சோலார் செல்களுக்கான சுங்கவரி ஆகஸ்ட் மாதம் 15 சதவிகிதமாகவும், பின்னர் 30 சதவிகிதமாகவும் உயர்த்தப்படும் எனவும் அவர் கூறினார். சோலார் மின் உற்பத்திக்கான தளவாடங்கள் 90 சதவிகிதம் வரை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்த வரி உயர்வு சீன நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments