பீகாரில் கனமழை-இடிக்கு 24 மணி நேரத்தில் 22 பேர் பலி

0 1956

இடியுடன் கூடிய கனமழைக்கு, பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

பீகாரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்ற வானிலை மைய அறிவிப்பை தொடர்ந்து, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு ஏற்கனவே மாவட்ட நிர்வாகங்களுக்கு முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் கனமழையை ஒட்டி ஏற்பட்ட இடிமின்னல்களில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த மூன்று நாட்களுக்கு, பீகார், அசாம், மேகாலயா, அருணாச்சல், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கத்தில் மிக கனமழையால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments