கோவில்பட்டி சிறையில்உயிரிழந்த தந்தை, மகன் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு

0 4585

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை, மகனின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜெயராஜ், பெலிக்ஸ் ஆகிய இருவர் மீதும் தாக்குதல் நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்த குடும்பத்தினரிடம் காவல்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதையடுத்து, தகுந்த நடவடிக்கை எடுக்க அரசு உறுதியளித்துள்ளதாகவும், அரசின் மீது நம்பிக்கை வைத்து உடலை பெற்று கொள்ளப்போவதாகவும் உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்த தந்தை மற்றும் மகன் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக நெல்லை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி மேஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்னிலையில் நடந்த சம்பவம் தொடர்பாக இரண்டாவது நாளாக உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments