தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

0 1243

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வனிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 40 கி.மீ. இருந்து 50 கி.மீ. வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, தென் கிழக்கு அரபிக்கடல் லட்சத்தீவு, கேரள, கர்நாடகா கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments