மதுரையில் கொரோனா வார்டில் ஒரே நாளில் 10 பேர் பலி

0 9111
மதுரையில் கொரோனா சிறப்பு வார்டுகளில் 10 பேர் ஒரே நாளில் பலி

மதுரையில் கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உள்பட 10 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா வார்டில் விருதுநகர் மாவட்டம் அள்ளம்பட்டியை சேர்ந்த 34 வயது கர்ப்பிணி பெண் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார்.  நாகமலை புதுக்கோட்டை வடிவெல்கரையை சேர்ந்த 27வயது இளைஞர்,  மதுரை வடக்கு வெளி வீதியை சேர்ந்த  57 வயது நபர் உள்ளிட்ட மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் தனியார் (அப்பல்லோ) மருத்துவமனை  வார்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே  மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலியாகியுள்ளனர்.

இருப்பினும் இன்று பலியான 10 பேரும் எதனால் உயிரிழந்தனர் என்பது உறுதி செய்யப்படவில்லை. உயிரிழந்தோரின் சடலங்கள்  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து 3 ஆம்புலன்ஸ் வாகனங்களில், தத்தனேரி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக திண்டுக்கல்லிருந்து 1 ஆம்புலன்ஸ் வழவழைக்கப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments