ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை தயாரிப்பது, ஏவுதலில் தனியாருக்கு அனுமதி-சிவன்

0 1084

ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை தயாரிப்பது மற்றும் ஏவுதல் போன்ற விண்வெளித்துறை செயல்பாடுகளில் இனி தனியார் துறை அனுமதிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் பேசிய அவர், இஸ்ரோவின் பிற கோள்களுக்கான விண்வெளித் திட்டங்களிலும் தனியார் துறை பங்களிக்க முடியும் என கூறியுள்ளார்.

விண்வெளித்துறையில் தனியார் துறை பங்களிப்புக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதி, இந்தியாவை புதிய விண்வெளி யுகத்திற்கு எடுத்துச் செல்லும் என சிவன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், பிற கோள்களுக்கு பயணம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது, நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்டவை தொடரும் என்றும் சிவன் கூறினார்.

விண்வெளியில் தனியார் துறையை அனுமதிப்பதால் உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள இளைஞர்கள் முன்வருவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

விண்வெளியின் தனியார் துறை பங்களிப்புக்கு வகை செய்யும், IN-SPACe நிறுவனம் 3 முதல் 6 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என சிவன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments