கொரோனா சிகிச்சை மருந்தான Dexamethasone - ஆல் லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு ஆபத்து

0 2665

கொரானா சிகிச்சையில் உயிரிழப்புகளை தவிர்க்க உதவுவதாக கூறப்படும் முடக்குவாத மருந்தான டெக்சாமீதசோன், லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு ஆபத்தானது என்று, அது குறித்த ஆய்வை நடத்திய  அமெரிக்க உத்தா மருத்துவக் கல்லூரி பேராசியர் சாமுவல் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்கு உதவும் என கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் இவரும் ஒருவராவார். மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே டெக்சாமீதசோனால் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள இவர், எந்த தருணத்தில் அந்த மருந்தை வழங்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமானது என கூறியுள்ளார்.

டெக்சாமீதசோன் மருந்து குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது முதல் பல அமெரிக்க மருத்துவமனைகள் அதை நோயாளிகளுக்கு அளித்து வருகின்றன. அதன் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments