ஆந்திராவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

0 1440

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் டேங்கர்கள் தடம்புரண்டு பாலத்திலிருந்து கவிழ்ந்ததில்தீப்பிடித்துக் கொழுந்து விட்டு எரிந்தது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சூர்ரெட்டிப் பாளையம் - தங்குதூரி இடையே எண்ணெய் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் டேங்கர்கள் தடம்புரண்டு பாலத்தில் இருந்து கீழே விழுந்தன.

அப்போது டேங்கரில் இருந்து கசிந்த எண்ணெயில் தீப்பற்றியதால் கொழுந்து விட்டு எரிந்தது. இதில் டேங்கர்களில் இருந்த எண்ணெய் முழுவதும் எரிந்துபோனது.

தடம்புரண்ட டேங்கர்களை அகற்றி, சேதமடைந்த ரயில்பாதையைச் சீரமைக்கும் பணியில் பித்ரகுண்ட - விஜயவாடா ரயில்வே பிரிவின் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments