கொரோனாவை பரப்பியதாக சீனா மீது அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு

0 1667

கொரோனாவை உலகம் முழுவதும் பரப்பிய சீனா வெற்று வாக்குறுதிகளைத் தந்தது என்றும் தனது வாக்குறுதியை அந்நாடு நிறைவேற்றவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சாடியுள்ளார்.

சுமார் 90 லட்சம் பேர் உலகம் முழுவதும் கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.4 லட்சம் பேர் உயிரிழந்தனர். மனித உயிர்களைப் பற்றி கவலைப்படாமல் கொரோனா குறித்த உண்மைகளை சீனாவின் ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி மறைத்து விட்டதாகவும் உலகம் முழுவதும் நோய் பரவிய பின்னரே, மிகவும் தாமதமாக சீனா அது பற்றி கூறியதாகவும் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் மிகப்பெரிய துன்பத்தை அனைவரும் அனுபவித்து வருவதாகவும் அவர் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை சீனாவின் மீது கொரோனாவைப் பரப்பியதாக விமர்சித்துள்ளார். சீன வைரஸ் என்றும் கொரோனாவை அவர் அழைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments