இந்திய எல்லைப்பகுதியில் மீண்டும் கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ள சீனா

0 5184

கால்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி அமைத்த கண்காணிப்பு கோபுரத்தை இந்திய ராணுவத்தினர் அகற்றிய நிலையில்,  மீண்டும் அங்கு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 15ம் தேதி இருநாட்டு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலுக்கு, இந்திய எல்லைப்பகுதியில் சீனா அமைத்து இருந்த கண்காணிப்பு கோபுரமே காரணமாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களில், நீக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரம் மீண்டும் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது தெரிகிறது.

மேலும், சமீபத்திய பேச்சுவார்த்தையின் போது துருப்புகளை முழுமையாக பின்வாங்குதாக கூறிய சீனா, மீண்டும் எல்லைப்பகுதியில் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி அதிக அளவில் துருப்புகளை குவிப்பதாகவும் பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments