இந்திய வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் உயிரிழந்ததை முதன்முறையாக ஒப்புக் கொண்டது சீனா

0 27430

இந்திய வீரர்களுடன் கடந்த 15ம் தேதி ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் உயிரிழந்ததை முதன் முறையாக அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால் அதிக எண்ணிக்கையில் இல்லை என்றும் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காகத்தான் எண்ணிக்கையை வெளிப்படுத்தவில்லை என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கர்னல் ஒருவர் உட்பட இரண்டு அதிகாரிகள் உயிரிழந்ததாக, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது ஒப்புக் கொண்ட சீனா, தற்போது வீரர்கள் சிலர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

லடாக்கின் கல்வான் நதிக்கரையில் நடைபெற்ற மோதல்களில் சீன வீரர்கள் 45 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் இதுவரை அதனை சீனா உறுதிப்படுத்தாமலே மௌனம் சாதித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments