பாக். பெண்ணுக்கும் இந்திய வாலிபருக்கும் காதல் -தடைபட்ட திருமணம் இந்தியாவில் குடியேற பிரதமரிடம் விண்ணப்பம்

0 2050

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசிக்கும் இளைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள எண்ணிய பாகிஸ்தான் நாட்டு இளம் பெண் ஒருவர் இந்திய குடியுரிமை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு விண்ணப்பித்துள்ளார்.

பாகிஸ்தான் பெண்ணான சுமல்யாவுக்கும் ஜலந்தரைச் சேர்ந்த வாலிபரான கமல் கலியானுக்கும்  இடையே காதல் மலர்ந்து கடந்த 2018ம் ஆண்டில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களால் திட்டமிட்டபடி திருமணம் செய்ய இயலவில்லை. சுமல்யா பாகிஸ்தானில்இருந்து இந்தியா வர விசா கிடைத்தால் தங்கள் திருமணம் நடைபெறும் என்று ஜலந்தரில் காதலிக்காக காத்திருக்கும் கமல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments