ஊரடங்கு சமயத்தில் ரூ.5000க்கு மேல் அதிகரித்த தங்கத்தின் விலை

0 6163

தமிழகத்தில் ஊரடங்கு சமயத்தில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு, ஐயாயிரத்து 600 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில், மார்ச் 23ம் தேதி தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் 31 ஆயிரத்து 616 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இதைதொடர்ந்து, கடந்த 4 மாதங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஐயாயிரத்து 656 ரூபாய் அதிகரித்துள்ளது. உட்சபட்சமக நேற்று ஒரு கிராம் தங்கம் நான்காயிரத்து 659 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி ஒரு கிராம் 53 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments