பாஜக-விற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க தேசிய மக்கள் கட்சி சம்மதம்

0 1394

மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க தேசிய மக்கள் கட்சி சம்மதம் தெரிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக தலைமையில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. இதனிடையே, சமீபத்தில் பாஜகவின் 3 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தேசிய மக்கள் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் உட்பட 6 எம்எல்ஏக்கள் பாஜக தலைமையிலான கூட்டணிக்கான தங்களது ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இதனால் அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, டெல்லியில் தேசிய மக்கள் கட்சி தலைவர்களுடன் நடத்திய பேச்சுவர்த்தையில் சமரசம் ஏற்பட்டதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments