சென்னையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு

0 1449

சென்னையில் காவல்துறை எஸ்பியின் மனைவி உள்பட ஒரே நாளில் 19 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

எஸ்பியின் மனைவி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

எஸ்பியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேரும் கொரோனா பாதிப்பால் பலியாகினர்.

சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 57 வயது ஆண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். கேஎம்சியில் 2 பேரும், சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் 55 வயது பெண்ணும் வைரஸ் தொற்றால் பலியாயினர். திருவல்லிக்கேணியை சேர்ந்த 32 வயது பெண் கொரோனா பாதிப்பால் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments