ஆந்திராவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நேற்று 9 ஆயிரத்து 834ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 497 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் மேலும் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 331ஆகவும், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 129ஆகவும் அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இதுவரை மருத்துவ சிகிச்சையில் 4,779 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5 ஆயிரத்து 423 பேர் மருத்துவ சிகிச்சை பெறுவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரத்தையும் சேர்த்து நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
Comments