செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 155 பேருக்கு கொரோனா

0 2770

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 155 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 4,035 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,185 ஆக உயர்ந்துள்ளது.

2027 பேர் குணமடைந்த நிலையில் 60 பேர் பலியாகினர். 2098 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவாரூர் கோவை திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த தலா 10 பேர் கொண்ட 20 மருத்துவக் குழுக்கள், ஏற்கனவே உள்ள 900 சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 1100 பேர் பரிசோதனைகளில் ஈடுபடுவதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிக அளவில் தெரியவருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments