'பசியால் திருடிவிட்டான்; இனி என் மகன் ஒரு போதும் திருட மாட்டான்!'- திருத்திய போலீஸாருக்கு உறுதியளித்த தாய்...

0 8027

த்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் அருகேயுள்ள டோல்மா என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் அஜய் பாபு. ஹைதராபாத்தில் கட்டுமானப்பணிக்கு செல்ல வேண்டிய சிறுவன் வழி தவறி, கேரளா மாநிலம் காசர்கோட்டுக்கு வந்து விட்டான். இந்த சமயத்தில், நாட்டில் லாக்டௌன் அறிவிக்கப்பட, அஜய் பாபு ஹைதராபாத் செல்ல முடியாமல் தவித்துள்ளான். கையிலிருந்த சொற்ப பணமும் செலவழிந்து விட, பசியால் வாடியிருக்கிறான் அஜய். ஒரு கட்டத்தில், பிச்சையெடுத்தாலும் வயிறு நிரம்பவில்லை. பசி தாங்க முடியாமல் வங்கி ஒன்றை உடைத்து உள்ளே லாக்கரிலிருந்த 600 ரூபாயை திருடியிருக்கிறான். போலீஸ் பிடித்து அஜய் பாபுவை கண்ணூர் சிறையில் அடைத்தது. சிறையில் இருந்து அஜய் பாபு ஓரு முறை தப்பியும் விட்டான் . போலீஸ் மீண்டும் பிடித்து வந்து கண்ணூர் சிறையில் போட்டது.

ஆனால், அஜய்பாபுவை ஜாமீனில் விடுவிக்க யாருமே வரவில்லை. 'இந்த சிறுவனை மீட்க யாருமே வரவில்லையே என்ன செய்யலாம்' என்று கண்ணூர் சிறை சூப்பிரண்டு ஜனார்த்தனம் யோசித்தார்.  அவனிடத்தில் விசாரித்த போது, கேரளாவில் யாருமில்லை என்பதும் தாயார் மற்றும் உறவினர்கள் உத்தரபிரதேசத்தில் இருப்பதும் தெரிய வந்தது. இதனால், அஜய்பாபுவை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஜனார்த்தனன் முடிவெடுத்தார்.

தொடர்ந்து, திருட்டு மற்றும் சிறையிலிருந்து தப்பிய இரு வழக்குகளிலும் போலீஸாரே தங்கள் சொந்த ஜாமீனில் அஜய்பாபுவை விடுவித்தனர். கண்ணூரிலிருந்து சிறப்பு ரயிலில் உத்தரபிரதேசத்துக்கு அனுப்பி வைக்க டிக்கெட்டும் எடுக்கப்பட்டது. ஊருக்கு செல்வதற்கு முன், அஜய் பாபுவுக்கு புதிய சட்டை உள்ளிட்ட துணிமணிகளும் எடுத்து கொடுக்கப்பட்டன. ரயிலில் செல்லும் போது இரு நாள்களுக்குத் தேவையான உணவு மற்றும் கைச் செலவுக்கு பணமும் போலீஸாரால் வழங்கப்பட்டது.

போலீஸார் காட்டிய கருணையால் தண்டனையிலிருந்து தப்பிய அஜய் பாபு சொந்த ஊருக்கு சென்று சேர்ந்தான். நடந்த விஷயங்களை தன் தாயாரிடத்தில் அஜய் பாபு கூறினான். தொடர்ந்து, அஜய்பாபுவின் போனிலிருந்து கண்ணூர் சிறை கண்காணிப்பாளர் ஜனார்த்தனத்தை தொடர்பு கொண்ட அவரின் தாயார், தன் மகனுக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்து கொண்டார். 'என் மகனின் நிலையால், கடந்த நான்கு மாத காலமாக உறக்கமில்லாமல் தவித்தேன். இனிமேல், ஒரு காலத்திலும் என் மகன் திருடமாட்டான்' என்றும் உறுதியளித்தார். இதனால், போலீஸ் அதிகாரி ஜனார்த்தனன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments