புதிதாக திருமணம் செய்த ஜோடி குவாரன்டின் மையத்துக்கு நன்கொடை

0 1410

மும்பையில் திருமணம் முடித்த கையோடு இளம்தம்பதி ஒன்று, குவாரன்டின் மையத்துக்கு 50 படுக்கை வசதிகளை நன்கொடையாக அளித்துள்ளது.

மும்பை வாசை பகுதியை (Mumbai’s Vasai) பகுதியை சேர்ந்த எரிக், மெர்லின் ஆகியோருக்கு அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், குறைவான எண்ணிக்கையில் உறவினர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர். அதேபோல் மணமக்களும் முகக்கவசம் அணிந்தபடி கைவிரலில் பரஸ்பரம் மோதிரம் அணிவித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து அங்குள்ள குவாரன்டின் மையத்துக்கு திருமண உடையோடு சென்ற புதுமண தம்பதியினர், அந்த மையத்துக்கு 50 படுக்கை வசதிகளை நன்கொடையாக அளித்தனர். மெத்தைகள், தலையணைகள் ஆகியவற்றையும், ஆக்சிஜன் சிலிண்டர்களையும் அவர்கள் நன்கொடையாக அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments