டெல்லியில் ஜூலை 6க்குள் அனைத்து வீடுகளிலும் உடல்வெப்ப சோதனை

0 1444

டெல்லியில் கொரோனா பரவலை தடுக்க வீடு வீடாக ஜூலை 6ம் தேதிக்குள் உடல்வெப்ப பரிசோதனை நடத்தி முடிக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்து டெல்லியில்தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் 3,947 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதுபோல டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைஅடுத்து, கொரோனா பரவலை தடுக்க புதிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 261 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 30ம் தேதிக்குள் அனைத்து வீடுகளிலும் வசிக்கும் மக்களுக்கு உடல்வெப்ப அளவு சோதனை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கண்காணிப்பையும், தொற்று பாதித்தோருடன் தொடர்பில் இருப்போரை அடையாளம் காணும் பணியையும் தீவிரபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments