புதுச்சேரியில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா உறுதி

0 807

புதுச்சேரியில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 461 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த மாஹே-வில் ஒருவருக்கும், புதுச்சேரியில் 58 பேருக்கும் இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 276 ஆக உள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 176 ஆக உள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம்  9 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments