திரிணமூல் காங். எம்.எல்.ஏ. கொரோனாவால் உயிரிழப்பு..!

0 2303

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ,வும் அந்த கட்சியின் பொருளாளருமான தமோனாஷ் கோஷ், கொரோனா பாதித்து உயிரிழந்தார்.

24 பர்கணாஸ் மாவட்டத்தில் உள்ள ஃபால்ட்டா சட்டமன்ற தொகுதியில் 3 முறை அவர் எம்எல்ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 60 வயதான அவருக்கு கடந்த மாதம் வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வேறு பல நோய்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தமோனாஷ் கோஷின் இறப்புக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவர் கட்சிக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருந்ததாகவும், சமூகசேவைகளில் தீவிரமாக ஈடுபட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments