இந்தியாவில் 24 மணி நேரத்தில் 15,968 பேருக்கு கொரோனா

0 2116

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 15 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாடு முழுவதும் புதிதாக கொரோனா பாதித்தோர், கொரோனாவுக்கு பலியானோரின் புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல் நாடு முழுவதும் மேலும் 465 பேர் கொரோனாவுக்கு பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் மகாராஷ்டிராவில் 75 பேர் கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்கள் எனவும், 173 பேர் கொரோனாவால் ஏற்கெனவே உயிரிழந்தும் முதலில் பலி கணக்கில் சேர்க்கப்படாமல் தற்போது சேர்க்கப்பட்டவர்கள் எனவும் மகாராஷ்டிர சுகாதார துறையால் கூறப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 183ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 476ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 2 லட்சத்து 58 ஆயிரத்து 685 பேர் குணமான நிலையில், மேலும் 1 லட்சத்து 83 ஆயிரத்து 22 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 5 மாநிலங்களாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், குஜராத், உத்தர பிரதேசம் ஆகியவை திகழ்கின்றன. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 39 ஆயிரத்து 10ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 531ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 66 ஆயிரத்து 602ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,301ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆகவும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 833 ஆகவும் உயர்ந்துள்ளது.

4ம் இடத்திலுள்ள குஜராத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 371ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,710ஆகவும் அதிகரித்துள்ளது. 5ம் இடத்திலுள்ள உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 588ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments