பாக்.தூதரக அதிகாரிகளை 7 நாட்களுக்குள் 50 சதவீதம் குறைக்க உத்தரவு

0 728

தீவிரவாதத் தொடர்பு, இந்தியாவில் போலி அடையாளத்துடன் உளவு பார்த்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அலுவலர்களை ஏழு நாட்களுக்குள் பாதியாக குறைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மே 31ம் தேதி போலி ஆதார் அட்டையுடன் உளவு பார்த்த இரண்டு அதிகாரிகள் கையும் களவுமாக டெல்லியில் கைது செய்யப்பட்டு உடனடியாக பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அலுவலர்களை பாதியாகக் குறைக்க உத்தரவிட்டுள்ள வெளியுறவு அமைச்சகம் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய அதிகாரிகளில் 50 சதவீத அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் அரசால் சாலைவிபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு தூதரக அதிகாரிகள் உள்பட 5 பேர் வாகா எல்லை வழியாக நாடு திரும்பிவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments