வீடுகளில் சீன மீட்டர்களை மாற்றி விட்டு இந்திய மீட்டர்களைப் பொருத்த உ.பி. அரசு முடிவு

0 2742

சீனப்பொருட்களை புறக்கணிக்கும் நோக்கத்தில் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட 15 ஆயிரம் மின்சார மீட்டர்களை வீடுகளில் இருந்து அகற்ற உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

எல்லையில் சீனாவுடனான மோதலுக்குப் பிறகு, இந்தியாவில் சீனப் பொருட்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள 15 ஆயிரம் வீடுகளில் மின் ஓட்டத்தை அளவிடும் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மீட்டர்களை அகற்றி விட்டு புதிய இந்தியத் தயாரிப்பு மீட்டர்களை பொருத்த அம்மாநில மின்சாரத்துறை திட்டமிட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே செயல்பாட்டில் மற்றும் பராமரிப்புப் பணிகளில் உள்ள சீனப் பொருட்கள் உபயோகப்படுத்தப்படும் என உத்தரப்பிரதேச மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments