சென்னையிலிருந்து சென்றவரை 'கொரேனாக்காரன் 'என்று அழைத்தவருக்கு பாட்டில் குத்து

0 78200

தலைநகர் சென்னையில் கொரோனா வேகமாக பரவியதால், லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். சொந்த ஊருக்கு சென்றாலும், அங்கு அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. கொரோனா தாக்கியிருந்தால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இல்லையென்றால் 14 நாள்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். கொரோனா பயத்தால் சென்னையிலிருந்து குமரி மாவட்டத்துக்கு சென்றவர்களில் சுபாஷ் என்பவரும் ஒருவர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்த இவரின் சொந்த ஊர குலசேகரம் அருகேயுள்ள பெருவிளைக்கடை ஆகும். சொந்த ஊரில் சுபாசுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது . சோதனையில் சுபாசுக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. சில நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட சுபாஷ் பிறகு, அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அஜின் ராய் என்பவர், சுபாஷை பார்த்து அடிக்கடி 'கொரோனாக்காரன்' என்று கிண்டலும் கேலியும் பேசி வந்துள்ளார். இதனால், மனவருத்தமடந்த சுபாஷ் இது குறித்து தன் சகோதரர் செல்வத்திடம் கூறி வேதனையடைந்துள்ளார். இதனால், அஜின்ராய் மீது கோபமடைந்த செல்வம், அஜின்ராயை உடைந்த பாட்டிலால் குத்தியுள்ளார். இதனால், படுகாயமடைந்த அஜின்ராய் அசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை. இது குறித்து , குலசேகரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மருத்துவர் நடராஜனிடத்தில் பேசிய போது, 'சென்னை போன்ற நகரத்தில் கொரோனா பரவ பல்வேறு காரணிகள் உள்ளன. கொரோனா என்பது அச்சத்துக்குரியதோ அல்லது கேலி பேச்சுக்குரியதோ அல்ல. மனிதர்களிடத்தில் இருந்து மற்றவருக்கு பரவும் தொற்று என்பதாலேயே மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் உரிய பாதுபாப்பு உடை அணிந்து சிகிச்சையளிக்கின்றனர். மற்றபடி, இந்த நோய் மட்டுமல்ல எந்த நோயுமே கேலிக்குரியது அல்ல. சொல்லப்போனால் ஒவ்வொருவரும் மற்றவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது .கேலி பேசுபவர்களுக்கும் இந்த நோய் வரும். இதனால், அடுத்தவர் மனம் புண்படும்படி கேலி பேசுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்' என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments