முழு ஊரடங்குக்கு பிறகு கொரோனா குறைய தொடங்கியுள்ளது - அமைச்சர் காமராஜ்

0 6876

முழு ஊரடங்கு அமலுக்கு பிறகு, சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனா குறையத் தொடங்கியிருப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

ஆழ்வார்பேட்டையில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர்,  சென்னையின் 15 மண்டலங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருவதாகவும்,  அங்கு கபசுரக் குடிநீர், மருந்துகள், முக கவசம்  வழங்கப்பட்டு வருவதாகவும், இதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிக்கு அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை,  53.33 சதவீதம் வீடுகளில் வழங்கப்பட்டு விட்டதென்றும், மற்ற வீடுகளுக்கும் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறதென்றும் அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments