முதலமைச்சரின் நடவடிக்கைகளை எள்ளி நகையாடும் பணியை செய்கிறார் ஸ்டாலின் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

0 2211

கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  எடுத்து வரும் நடவடிக்கைகளை எள்ளி நகையாடும் பணியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்து கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோபன் ராமானுஜரை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிராம வழக்கப்படி கொரோனாவை  இறைவன்தான் கட்டுபடுத்த வேண்டும் என தெரிவித்ததை கூட  ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார் எனவும், இதுபோல எதை வேண்டுமானாலும் விமர்சனம்  செய்யலாம் என்ற  நிலைப்பாட்டை ஸ்டாலின் நிறுத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments