சென்னையில் வீடு, வீடாக பரிசோதனை செய்ததில் 8,000 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 6361

சென்னையில் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டதில் 8 ஆயிரம் பேருக்கும், மருத்துவ முகாம்கள் மூலம் 5 ஆயிரத்து 400 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முன்பு இரண்டு அறிகுறிகள் இருக்கும் நபர்கள் தான் கண்காணிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு அறிகுறி இருந்தாலே அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments