இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.40 லட்சத்தை தாண்டியது

0 1270

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 14 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், உலக அளவில் அத்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 4ஆவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட புள்ளி விவரங்களில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 14 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 312 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மேலும் 199 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 414ஆக  அதிகரித்திருந்தது. இதேபோல் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 11ஆகவும் உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு 1 லட்சத்து 78 ஆயிரத்து 14 பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து, 2 லட்சத்து 48 ஆயிரத்து 190 பேர் இதுவரை மருத்துவ சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 796ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு அந்த மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 6,283ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments